திடீரென சாமியாராக தோன்றிய ஈரோடு விசுவநாதன்!!

November 21, 2019 at 5:22 pm
pc

ஈரோடு ; கனவில் தோன்றிய மகான் கூறியதை கேட்டு 10 அடி ஆழ குழிக்குள் பிராத்தனை செய்து வரும் விஸ்வநாத சாமியாரை காண பல்வேறு மக்கள் பல மயில் தூரத்தை கடந்து வருகிறார்கள் .

ஈரோட்டில் அந்நியூர்  அருகே  உள்ள நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர்  விசுவநாதன் .இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தை உள்ளது . ஆனால் இவர் 25 ஆண்டுகளாக தம் குடும்பத்தை பிரிந்து துறவத்தை  மேற்கொண்டுள்ளார் .

இந்நிலையில்   அவர்  ஒரு  நாள் அமர்நாத்  யாத்திரை சென்றுள்ளார்  .அங்கு ஒருநாள் தூங்கிய பொழுது கனவில் ஒரு மகான் தோன்றி இவ்வாறு கூறியுள்ளார் ” நல்லிக்கவுண்டன்புதூரில் பாதாள லிங்கத்தை 10 அடி ஆழ குழியில் வைத்து பிரதிஷ்டை செய்து வந்தால் ,உலக நன்மை கிடைக்கும்”.
கனவில் தோன்றிய மகான் கூறிய வார்த்தையை கேட்டு அதன் படி நடந்த விசுவநாதன் தன்னையே மாற்றிக்கொண்டு நீண்ட தாடியை வளர்த்து தனது  பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சாமி என மாற்றிக்கொண்டார் .

தாம் 10 அடி ஆழ குழிதோண்டி  பாதாள லிங்கத்தை  பிரதிஷ்டை செய்து 48 நாள் மவுன விரதத்தை மேற்கொள்ள போவதாக கூறினார். ஆனால் கிராமத்தில் உள்ள பலர் அவரை நம்பவில்லை .அவர் கூறியபடி கடந்த 17 ஆம் தேதி  குழிக்குள் பாதாள லிங்கத்தை வைத்து பிரதிஷ்ட  செய்து 48 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் மவுனமாக இருந்து பிராத்தனை செய்து வருகிறார் .

 எதாவுது கூற வேண்டுமென்றால் காகித்தை எடுத்து எழுதி காட்டுகிறார் .குழிக்குள் இருந்தே மக்களை ஆசிர்வதித்து வருகிறார் .இச்சம்பவத்தை காண பல திசைகளிலிருந்து  மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் .
இதனால் நல்லிக்கவுண்டன்புதூர் கிராமம் பரபரப்பாக காணப்படுகிறது .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website