சொந்தக்காரர்கள் வீட்டிலேயே திருடிய காதல் ஜோடி!! சிசிடிவி கேமெராவில் சிக்கினார்கள்.
சென்னை: சென்னை வளசரவாக்கத்தை அடுத்த காரப்பாக்கம் செங்குட்டுவன் தெருவில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் கடந்த NOV 21 மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடியதாக காவல் துறையில் புகார் அளித்தார். புகாரை ஏற்று கொண்ட காவல் துறையினர் விசாரிக்க தொடங்கினர். அருகில் இருந்த ஒரு வீட்டில் சிசிடிவி கேமராவை கண்ட போலீசார் அதில் இருந்த வீடியோ பதிவை ஆராய்ந்தனர்.
சிசிடிவி- யில் இருவரின் முகம் தெளிவாக பதிவானது. மேலும் சிசிடிவி பதிவில் நித்தியா மற்றும் கார்த்திக் என அடையாளம் கண்டனர் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் ஜெகதீசனின் உறவினர்கள் எனவும், உறவினர்கள் வீட்டில் இது போன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்கள் சம்பாத்தியம் போதவில்லை என்பதற்காக, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது உறவினர்கள் வீட்டில் திருடியதாக வாக்குமூலம் அளித்தனர்.