“காதலால் இணையும் தளபதி விஜய் – அதர்வா குடும்பங்கள் ” விரைவில் டும் டும் டும் !!!
மறைந்த நடிகர் முரளி குடும்பமும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் குடும்பமும் திருமண உறவின் மூலம் இணைகிறது. டிசம்பர் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்ய முடிவு.
மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் என்பவரும், எஸ்.ஏ சந்திரசேகரின் கூட பிறந்த தங்கை விமலாவின் மகளுமான சினேகா பிரிட்டோ கல்லூரி காலத்திலிருந்தே ஆகாஷை காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்தது. இரு குடும்பத்தினரும் வெவ்வேறு மதத்தினர் என்பதால் இவர்களின் காதலில் மதம் தடையாக இருந்தது ஆனால் ஆகாஷும் – சினேகா பிரிட்டோ-வும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால் இவர்கள் காதலுக்கு இருகுடும்பமும் காதலுக்கு மரியாதை செய்துள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பின்னரே இவர்கள் காதல் கைகூடியுள்ளது.
எஸ்.ஏ சந்திரசேகர்க்கு மிகவும் பிடித்தமான பேத்தியாக சினேகா இருந்துள்ளார். எனவேதான் சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தில் சினேகாவை இயக்குனராக அறிமுகம் செய்யவுள்ளார். ஆகாஷ் – சினேகா பிரிட்டோ-வின் நிச்சயதார்த்தம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது . சினேகாவின் தந்தை பிரிட்டோ தான் “தளபதி 64”-இன் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.