இது அதுல ??? எங்கே சுட்டீங்க டியூனை ? தர்பார் பட “சும்மா கிழி” பாடலை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள் !!
அனிருத் இசையில் நேற்று வெளியாகிய தர்பார் படத்தின் “சும்மாகிழி ” பாடலின் சிங்கள் டிராக் ,ஐயப்ப சாமி பாடலில் இருந்து சுடப்பட்டதா என சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் விமர்சனம்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் சிங்கள் டிராக் நேற்று வெளியாது. வெளியான சிலமணி நேரத்திலே லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது. இந்தநிலையில் ரசிகர்கள் இந்தப்படத்தின் “சும்மா கிழி “பாடலின் மெட்டு பல வருடங்களுக்கு முன்பு வெளியான ஐயப்ப சுவாமி ஆல்ப பாடலை போல உள்ளது என சர்சை கிளம்பியுள்ளனர். இப்பாடலில் வரும் முதல் இசை அண்ணாமலை படத்தில் வரும் “வந்தேன்டா பால்காரன்” என்ற பாடலினிசையை போன்று உள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது, அனிருத்துக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது
மற்றொரு தரப்பு இந்த பாடல் தேவா இசையில் உருவான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் உள்ள தண்ணி குடம் எடுத்து என்ற பாடலை போல உள்ளது எனவும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அனிருத்தின் மீது அவர் பழைய பாடல்களை காப்பி அடிக்கிறார் என்ற புகார்கள் எழுவது புதிதல்ல. எல்லாவற்றிக்கும் மேலாக அனிருத் இசையில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் பாடல் ஒன்று ஆங்கில பாடல் போல உள்ளது என்று எழுந்த புகாரால் அந்த பாடல் யூடியூப்பில் இருந்தே நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.