ஆளே இல்லாத காட்டில், ஹாலிவுட் ஸ்டைலில் ஆண்ட்ரியா!! வைரலாகும் புகைப்படங்கள்…

December 2, 2019 at 4:53 pm
pc

நடிகர் பரத் நடிப்பில் வெளியான “பொட்டு” படத்திற்கு பிறகு ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ” கா ” . இதில் ஆண்ட்ரியா சோலோ ஹீரோயினாக நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. கா என்றால் காடு, கானகம் என்று பொருள்.முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கிவருகிறோம்.தற்பொழுது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாரில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம் என்றது படக்குழு.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

ஆளே இல்லாத அடர்ந்த காட்டுக்குள் ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

https://www.instagram.com/p/B5UvteqgtMe/?igshid=1snl6irdgr59q
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website