இதுதான் சமூக இடைவெளியா ? கொல்கத்தாவில் இயல்புநிலை திரும்பி விட்டதா ?

இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
புது வழி போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்த நாளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் கொல்கத்தாவில் உள்ள பேருந்துகளில் இருக்கும் கூட்டம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமூக இடைவெளியை சமூகப் பற்று ஆகியவற்றை அரசு வலியுறுத்தி வரும் நிலையில். கரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் சற்றும் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் ஏறி செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை பதற்றமடைய செய்துள்ளது.
என்னதான் முகக்கவசம் அணிந்தாலும் ஒருவருக்கொருவர் ஒட்டி உரசிக்கொண்டு பேருந்துகளில் பயணம் செய்யும் யாராவது ஒருவருக்காவது குர்ஆனை இருந்துவிட்டால் பல ஆயிரம் பேருக்கு பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த கூட்ட நெரிசலை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகிறது.