நடிகர் சுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் படங்களை நீங்கிவிடுங்கள் – மகாராஷ்டிரா போலீஸ் எச்சரிக்கை

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள பல திரையுலக நட்சத்திரங்களையும், அரசியல் பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இழந்த நிலையில் இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என மும்பை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரிந்திருந்தால் அழித்து விடுமாறு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மஹாராஷ்டிரா போலீசார் ட்விட்டர் பக்கத்தில், ”அந்த புகைப்படம் பரப்பப்படுவது கவலைக்குரியது மற்றும் மோசமான ரசனை கொண்டது. இதுபோன்ற பதிவுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை. மேலும் உடனடியாக நீக்கப்பட வேண்டியவை” என தெரிவித்துள்ளனர்.