“விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்” பீஃல் பண்ணும் காதல்மன்னனின் நாயகி !!!
1998ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான “காதல் மன்னன் ” படத்தில் முதன்முதலாக அறிமுகமானவர் தான் நடிகை மானு. காதல் மன்னன் படத்தின் இயக்குனர் சரனுக்கும் , மாபெரும் இசைமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நடிப்பு ரீதியாகவும், இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கும் காதல் மன்னன் தான் முதல்படமாகும். இவர் காதல் மன்னன் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை .நீண்ட நாட்களுக்கு பின் என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் 4 குழந்தைகளின் அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தில் அறிமுகமான நடிகை மானு சென்னையில் இன்று தனது சினிமா உலக அனுபவங்களை ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்து கொண்டார் .
இந்த பேட்டியில் அவர் பேசியதாவது , மானு அசாம் மாநிலத்தின் குவாஹாட்டியை சேர்ந்தவர். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார. காதல் மன்னன் படத்திற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருக்கும் போது எதேர்ச்சையாக விவேக் இவரை பார்த்து இவரின் நடன குழுவிடம் மானுவை நடிக்க கேட்டுள்ளார் . இதற்கு மானு முதலில் சம்மதிக்கவில்லை .மேலும் இயக்குனர், தயாரிப்பாளர் தொடர்ந்து வந்து கேட்கவே மானுவின் தந்தை இதை நீ கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கவேண்டும் என கூறினார். அதனால் அந்த படத்தில் நடித்தேன் . படப்பிடிப்பின் போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை என கூறிக்கொண்டே இருப்பேன், அந்த அளவுக்கு மிகவும் மோசமான படப்பிடிப்பு அனுபவம் என கூறினார் .
அஜித் நல்ல நடிகர் அவர் சிறப்பாக நடிப்பார் , என்னுடன் நடித்த விவேக் ,எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கிரீஸ் ஆகியோர் சிறப்பாக நடித்தனர் . நான் மட்டும் தான் எதுவும் தெரியாமல் முழிப்பேன் என்னால் தான் படப்பிடிப்பு தாமதமாகும். படம் வெளியாகும் சமயத்தில் நான் அசாமிற்கே சென்றுவிட்டேன் . அதற்கு பின்னர் பல தயாரிப்பாளர்களும் ,இயக்குனர்களும் என்னை நடிக்க அழைத்தார்கள் .எனக்கும் நடிக்க விருப்பமில்லாததால் அப்போது நான் கண்டுகொள்ளவில்லை .ஒருநாள் தளபதி விஜய் படத்தில் நடிக்க அவரது மேலாளர் என்னை அழைத்தார். அதையும் நான் மறுத்துவிட்டேன் . இப்போது அந்த பெரிய வாய்ப்புகளை தவறவிட்டதை நினைத்து வருந்துகிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளேன். தற்போது சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறேன் . இன்றும் நடிகர் அஜித் குடும்பத்துடன் நட்பாக உள்ளேன் என கூறினார்.