20 டன் திமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ குப்பை ! ஸ்காட்லாந்தில் இறந்து கரை ஒதுங்கியது

ஸ்காட்லாந்தில் உள்ள ஹாரிஸ் கடற்கரை பகுதியில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று ஒரு இளம் திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. சுமார் 20 டன் எடையுள்ள இந்த திமிங்கலத்தை ஸ்காட்லாந்து கடல் வள ஆராய்ச்சி துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில் சுமார் 100 கிலோ எடையுள்ள குப்பை அதன் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடலில் உள்ள குப்பைகளை திமிங்கலம் தின்றதால் அதன் வயிற்றில் செரிமான கோளாறு ஏற்பட்டு இறந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த 20 டன் எடையுள்ள திமிங்கலத்தை ஹாரிஸ் கடற்கரையில் குழி தோண்டி புதைத்தனர். இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகம் ஏற்படுவதால் கடலில் குப்பைகளை கொட்ட பல கடல் உயிரினின பாதுகாப்பு அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
