”பழிக்கு பழி வாங்கிய சின்மயி” சுஹாசினியின் பகிரங்க முடிவு , ‘பொன்னியின் செல்வனிலிருந்து வைரமுத்து நீக்கப்பட்டாரா.???
”சின்மயி” என்ற பெயருக்கு இண்ட்ரோ அவ்வளவு தேவை இல்லை, ஏனென்றல் பெண்ணியவாதியாக இவர் சமீபகாலத்தில் எடுத்த அவதாரம் தமிழகத்தில் கட்டு தீயாய் பரவியுள்ளது . இதனடிப்படையில் வைரமுத்துமீது இவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் பலர் இவருக்கு ஆதரவாகவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ,சமீபத்தில் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்த 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவில் வைரமுத்து கலந்து கொண்டார்.
இதை கண்டு ஆத்திரமடைந்த சின்மயி, ‘ஒருவன் மீது பாலியல் புகார் விழுந்தால் அவனால் வெளியில் தலைகாட்ட முடியாது. யாரையும் எதிர்கொள்ள முடியாது. ஆனால் வைரமுத்து இந்த ஆண்டு முழுக்க பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் பாதிப்புக்குள்ளான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் திரையுலகில் உள்ள பெரியவர்களால் எனக்கு கொடுக்கப்பட்ட நீதி’ என்று சாடினார்.
இப்படி வைரமுத்துவை பின் தொடர்ந்து வரும் சின்மயி அவரது திரையுலக வாழ்விற்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளார். அதாவது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐஸ்வர்யா ராய் , விக்ரம், அமிதா பச்சன், ஜெயம்ரவி என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் இடம்பெறும் பாடல்களை எழுத கவிஞர் வைரமுத்து ஒப்பந்தமாகி இருந்தார்.
இதை அறிந்த சின்மயி, நேராக மணிரத்னம் மனைவி சுஹாசினியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது வைரமுத்துவின் கேரக்டர் குறித்தும், அவர் தனது பாலியல் தொல்லை கொடுத்ததற்கான சில ஆதாரங்களையும் காட்டி கதறியதாக தெரிகிறது. மேலும் நாமெல்லாம் ஒரே இனம் புரிஞ்சிக்கோங்கோ என்று இலைமறை காயாக பேச இந்த விவகாரத்தை மணிரத்னம் காதுக்கு கொண்டு சென்றுள்ளார் சுஹாசினி.
இதையடுத்து மணிரத்னம் வைரமுத்துவை தொடர்பு கொண்டு நீங்கள் பொன்னியின் செல்வனுக்கு பாடல் எழுதவேண்டாம் மன்னித்துவிடுங்கள் என்று கூறி ஜகா வாங்கியுள்ளாராம். பொதுவாக இதிகாச படங்களுக்கு பாடல் எழுதும் அளவுக்கு, வைரமுத்துவை தவிர பொருத்தமான ஆள் இப்போது திரையுலகில் இல்லை என்னும் நிலையே உள்ளது.