ரஜினியின் தர்பார் : டிசம்பர் 7 பிரமாண்டமாய் அரங்கேற இருக்கும் ஆடியோ வெளியிட்டு விழா !!
ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் டிசம்பர் 7 ஆம் தேதி பிரமாண்டமாய் அரங்கேற உள்ளது. இந்த விழாவில் பல பிரபலங்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தர்பார் படத்தின் “சும்மா கிழி” பாடல் யூடியூபில் பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில் இசை வெளியீட்டை பிரமாண்டமாக திட்டமிட்டுள்ளனர். இந்த தகவைலை லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.