16 வயது இளம் டிக்-டாக் பிரபலம் தற்கொலை.., அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

கடந்த இரண்டு மாத காலத்தில் மன அழுத்தம் காரணமாக பிரபலங்கள் தற்கொலை செய்த சம்பவம் அதிகமாகி உள்ளது. டெல்லியில் 16 வயதான டிக்-டாக் பிரபலம் Siya kakkar தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
16 வயதேயான சியா காக்கர் வளர்ந்து வரும் நட்சத்திரமாக சமூக வலைத்தளங்களில் ஜொலித்து இருந்தார். சினிமாவில் ஹீரோயினாக அளவிற்கு அழகும் திறமையும் கொண்ட இவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் முழுவதுமாக வெளியாகவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2 மாதத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் மேனேஜர் டிஷா, பிறகு சுஷாந்த் சிங் மற்றும் சீரியல் நடிகைகளின் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தம் தற்போது மன வியாதியாக மாறி பலரின் வாழ்க்கையில் மோசமான நினைவுகளை விட்டுச் செல்கிறது.
