இந்த வயதிலும் நடிகர் சிவகுமார் இப்படியா ? ஆச்சரியப்படவைக்கும் ஆரோக்கியம்

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமார் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே நடித்துக் கொண்டிருப்பவர். மூத்த நடிகர் சிவருமாரின் 2 வாரிசுகளும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் உள்ளனர். நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா தனது ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி, யோகா பயிற்சி செய்வதாக பல மேடைகளில் பேசி இருக்கிறார். தன்னை மேம்படுத்திக்கொள்ள எனது தந்தையிடம் நிறைய விஷயத்தை கற்றுக்கொண்டேன் எனவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த வயதிலும் நடிகர் சிவகுமார் எப்படி ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கிறார் என்ற கேள்வி பலரிடம் உள்ளது. உடம்பை வைத்துக் கொள்ளும் ரகசியம் தற்போது அவள் செய்து கொண்டிருக்கும் யோகா போஸ் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது. யோகா ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆரோக்கியத்தையும் மனதையும் சீராக வைத்து கொள்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
தற்போது பல நாடுகளில் இளைஞர்கள் யோகாவை பின்பற்ற தொடங்கிவிட்டனர். இதை சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தால் ஆரோக்கியம் சீராக வைத்துக்கொண்டு வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும் என்பது உண்மை.