போதை தலைக்கேறி உச்சம் அடைந்து சேற்றில் புரளும் போதை ஆசாமியின் வீடியோ !

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் மதுகடைகள் இயங்கி வருகின்றது. கொரோனா அதிகம் பரவியுள்ள பகுதிகளில் டாஸ்மார்க் திறக்க தமிழக அரசு தடை விதித்தது. பல மாவட்டங்களில் டாஸ்மாக் வியாபாரம் அமோகமாக நடந்து வருகின்றது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் மது அருந்துபவர்கள் நிதானமாக காத்துக் கொண்டு மது வாங்கி சென்ற காட்சிகளெல்லாம் வெளியானது.
பல இடங்களில் மது குடித்துவிட்டு அலப்பறை கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் சாலை அருகே வயலில் ஒரு ஒரு குடிமகன் குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் சேற்றில் படுத்து உறங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. வெயிலுக்கு இதமாக சாலையோரம் இருக்கும் சேற்றில் படுத்து புரள்வது போதையின் உச்சகட்டம்.