ஊழியரை கடத்தி பிறப்புறுப்பில் சானிடைசரை தெளித்து சித்ரவதை செய்த மேலாளர்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வேலையிழப்பு, பொருளாதார சரிவு, வறுமை போன்றவை மக்களை வாட்ட ஆரம்பித்து இருக்கின்றன. அதிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலை விரித்தே ஆடத்தொடங்கி இருக்கின்றன. தற்போது ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கோத்ரூட்டில் ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்து நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 30 வயது இளைஞர் ஒருவர் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.
வேலை தொடர்பாக டெல்லி சென்ற அவர் கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டார். தொடர்ந்து மே 17-ம் தேதி புனே திரும்பி இருக்கிறார். வெளியூரில் இருந்து வந்ததால் 17 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அவரது உரிமையாளர் சொல்லி இருக்கிறார். ஆனால் ஊழியர் கையில் காசு சுத்தமாக இல்லை. வேறு வழியின்றி கையில் இருந்த டெபிட் கார்டு, செல்போனை அடகு வைத்து தங்கியிருக்கிறார்.
இதனியிடையே கடந்த ஜூன் 13-ம் தேதி கம்பெனி உரிமையாளர் மற்றும் சிலரை சேர்த்துக்கொண்டு ஊழியரை பிடித்து, கடத்தி சென்று அடைத்து வைத்துள்ளார். மேலும், கம்பெனி பணத்தை செலவு செய்ததாக அவரை அடித்து, உதைத்து அவரது ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்து சித்திரவதை செய்துள்ளனர். இதையடுத்து ஒரு வழியாக அவர்களுடம் இருந்து தப்பித்த ஊழியர் காவல் நிலையத்தில் புகாரளிக்க தற்போது அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அனுமதித்து இருக்கிறார்கள்.