தாத்தாவின் பென்ஷன் பணத்தை பப்ஜி விளையாடி காலி செய்த சிறுவன் ? தொகை எவ்வளவு தெரியுமா

இந்தியா முழுவதும் பப்ஜி பேட்டில் கிரவுண்ட் எனும் மொபைல் கேமுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல லட்சக்கணக்கான அடிமையாகி உள்ளனர். பெரும்பாலான நேரத்தை இவர்கள் இந்த விளையாட்டிலேயே கழிக்கின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் தாத்தாவின் பென்சன் வங்கி கணக்கில் இருந்த பணத்தை வைத்து பப்ஜி வீடியோ கேமில் காசை செலவழித்து உள்ளார். மேலும் விளையாட்டில் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்பதற்காக பணத்தை செலவழித்துள்ளார்.
மேலும் இந்த யுத்தியை பள்ளியில் உள்ள ஒரு சீனியர் மாணவர் ஒருவர் இதை கற்றுக் கொடுத்ததாகவும் இதைப் பயன்படுத்தி சுமார் 2 லட்சம் வரை தாத்தா வின் வங்கி கணக்கில் இருந்து காலி செய்துள்ளான். எதேர்ச்சையாக இந்த சிறுவனின் தாத்தா வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சரிபார்க்கும் போது மிகப்பெரிய தொகையை பேடிஎம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு தெரியவந்தது.
இதனால் முதியவர் அதிர்ச்சி அடைந்து சிறுவனை கண்டித்துள்ளார். படிப்பதற்காக போன் வேண்டுமென இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு சிறுவன் இதுபோன்று செய்துள்ளான். சில படிப்பறிவு இல்லாத பெற்றோர்களை சிறுவர்கள் இப்படி ஏமாற்றுவது தொடர்கதையாக தான் இருக்கிறது. பிள்ளைகளுடன் மொபைல் போன்களை கொடுப்பதே பெற்றோர்கள்தான் என்பது தவிர்க்க முடியாத உண்மை