இடிந்து வீழும்நிலையில் உள்ள பள்ளி !! குளிர் மழை பாராது திறந்த வெளியில் பாடம் படிக்கும் மாணவர்கள் !!

பெரு நாட்டில் மழையால் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி, வெட்டவெளியில் கடும் குளிரில் பாடம் படிக்கும் மாணவர்கள்.
பெரு நாட்டில் சமீபத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள சில பள்ளிகள் வெகுவாக சேதமடைந்துள்ளன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தில் இருந்து வெளியேறி வகுப்பறையில் இருந்த நாற்காலி, மேசைகளை போன்ற பொருட்களை வெளியே கொண்டு வந்து, பள்ளிக்கு வெளியிலேயே போட்டு, மழை கடும் குளிர் ஆகியவற்றிற்கு நடுவே தங்களது படங்களை பயின்றுவருகிறார்கள்.