அடிச்சு நொறுக்கிய இந்தியா ! சுக்குநூறாக சிதறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் !!

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி, 50 பந்துகளில் 94 ரன் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார் !
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று ஹைதெராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 207 ரன் குவித்தது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. அதிகபட்சமாக ஷிமரோன் ஹெட்மேயேர் அதிகபட்சமாக 56 ரன் எடுத்தார், கிரோன் பொல்லார்ட் 19 பந்துகளில் 1 பௌண்டரி 4 சிக்ஸர் அடித்து 37 ரன் அதிரடியாக குவித்தார்.

208 என்னும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 8 ரன் எடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார் மறுமுனையில் KL ராகுல் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 62 ரன் குவித்தார். பின்னர் வந்த விராட் கோலி அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 50 பந்துகளில் 6 பௌண்டரி 6 சிக்ஸர் அடித்து 94 ரன் குவித்தார் கடைசிவரை ஆடினார். 18.4 ஒவேரில் 209 ரன் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.
