முகக்கவசம் அணியாததால் கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸ்: சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு!

ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சீராலா நகரை சேர்ந்தவர் கிரண்குமார். கடந்த 19-ம் தேதி முகக் கவசம் அணியாமல் வீதியில் நடமாடிய கிரண் குமாரை தடுத்து நிறுத்திய சீராலா காவல் நிலைய போலீஸ் எஸ்.ஐ விஜயகுமார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் படுகாயம் அடைந்த கிரண் குமாரை உறவினர்கள் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து சென்று குண்டூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கிரண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.