திமுக பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை – மயிலாடுதுறையில் பரபரப்பு!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, திமுக பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பாபு. இவர் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் மறைந்திருந்த மர்ம கும்பல் பாபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்பி. ஸ்ரீ நாதா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார். திமுக பிரமுகர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.