தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 6,729 பேருக்கு கொரோனா உறுதி !!

July 24, 2020 at 8:14 pm
pc

தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 6,729 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,729 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 56 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர் இதில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு மொத்தமாக 3,320 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இதுவரை 22,23,019 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,137 பேர் ஆண்கள், 2,648 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,21,389 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 78,337 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297 ஆக உள்ளது.

இன்று மட்டும் தற்போது 53,132 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 10,006 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,64,995 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 24 ஆயிரத்து 748 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 114 ஆய்வகங்கள் அரசு-58 மற்றும் தனியார் 56 ஆய்வகங்கள் செய்யப்பட்டு வருகிறது என சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website