“தமிழ் மக்கள் போல மற்ற மாநில மக்களும் இருக்க வேண்டும்” பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார மந்த நிலையை மீட்க முடியாது!!! -ப.சிதம்பரம் பேட்டி.

December 7, 2019 at 10:52 pm
pc

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்க வேண்டும், பாஜக ஆட்சியில் 4.5% சரிந்துள்ளது பாஜகவினருக்கெதிரான எதிர்ப்புணர்வு இந்தியாவில் வரவேண்டும், சென்னையில் ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்கள் சிறைவாசம் பெற்று, தற்போது ஜாமீனில் வெளிவந்த முன்னாள் மத்திய நித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சுமார் 4 மாதங்களுக்கு பிறகு தமிழகத்திற்கு வந்துள்ளார்.இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை காங்கிரஸ் தொண்டர்களும், சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், என் மன உறுதியை கலைக்க என்னை சிறையில் அடைத்தார்கள் ஆனால் என்னுடைய மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. பாஜக ஆட்சியில், நாட்டில் சுதந்தரம் இல்லை. நான் சிறைவாசத்திற்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன். ஆனால் காஸ்மீர் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. நமது நாடு சுதந்திரத்தை பறிக்க கூடிய பாசிச ஆட்சியின் பக்கம் நகர்ந்துகொண்டு இருக்கிறது.

தமிழக மக்கள் பாஜக மக்கள் மீது காட்டுகின்ற எதிர்ப்புணர்வை எப்போது இந்திய மாநிலம் அனைத்தும் காட்டுகிறார்களோ அப்போதுதான் இந்தியா சுதந்திர நாடாகும். மேலும் இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 2004 மற்றும் 2010 வரை 8.5% பொருளாதார வளர்ச்சி இருந்தது ஏன் 9% வளர்ச்சியை கூட தொட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 4.5% க்கு பொருளாதார வளர்ச்சி தள்ளப்பட்டுள்ளது. இதுகூட அவர்கள் கூறும் பொய் விவரமாக கூட இருக்கலாம். பொருளாதாரத்தை மீட்க வழி தெரியாமல் மத்திய அரசு திணறுகிறது.

இப்படியே சென்றால் நாட்டை பொருளாதார அழிவில் இருந்து மீட்க முடியாமல் போகும். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதை தடுப்பது பெண்களும், அரசும் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்மகனும் தான் .நிர்பயா நிதியை பயன்படுத்தி பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website