17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலன் -போலீசாரால் கைது!

புதுக்கோட்டை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜகோபால் (வயது23). இவர் கல்லுப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ராஜகோபால் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜகோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட சிறுமியை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 17 வயது சிறுமியை 23 வயது வாலிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.