பள்ளி சிறுவர்கள் விளையாட வாங்கிய விசிலில் ஆபாசப் பட பிலிம் ரோல் – பெற்றோர்கள் அதிர்ச்சி!

சூலூரில் மளிகை கடையில் வாங்கிய விசிலில் ஆபாச பட பிலிம் ரோல் இருந்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளர்.
கோவை சூலூர் புதிய பேருந்து நிலையத்தில், உள்ள மளிகை கடையில் 5 ரூபாய் கொடுத்து பள்ளி மாணவர்கள் விசில் வாங்கியுள்ளனர். அதனை வைத்து விளையாடி முடித்த குழந்தைகள் பின்னர் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த குழாய் வடிவிலான விசிலில் ஆபாச பட பிலிம் ரோல் சுற்றப்பட்டு இருந்தது.
இதையடுத்து மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் கோவை சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மளிகை கடை உரிமையாளர் பாலகுமாரிடம் விசாரணை செய்த போலிஸார் விசில்களை பறிமுதல் செய்து, கடைக்கு சப்ளை செய்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபாசபடங்களால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த படங்களைக் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இது போன்ற பழைய ஆபாச படம் பிலிம் ரோல்கள் கிராமப்புற மாணவர்கள் வாங்கும் விளையாட்டு பொருட்களில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் ஏற்படுத்தி உள்ளது.