அன்பின் வெளிப்பாடு: 4 வயது சிறுமிக்கு போட்டிக்கான டிக்கெட்டை கொடுத்தார் !!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே நடக்கும் T 20 தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது இறுதி போட்டி இன்று மும்பையில் உள்ள வாஙக்ஹெடே மைதானத்தில் நடக்கிறது. இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் திருவனந்தபுறத்தில் நடத்த போட்டியின்போது வெஸ்ட் அணி மூத்த வீரரும், விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்டின் இரண்டாவது போட்டிக்கு புறப்படும்போது நின்றுகொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு போட்டிக்கான டிக்கெட் மற்றும் சிறிய பரிசை வழங்கினார். இந்த நிகழ்வை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.
