கோவையில் தீவிரவாத பயிற்சி மையங்கள் கண்டுபிடிப்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்!!

December 10, 2019 at 5:07 pm
pc

சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.அமைப்புக்கான ரகசிய ஆள் சேர்க்கும் மையம் கோவையில் நடத்தப்படுவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.

சமீபத்தில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பில், 290 பேர் கொல்லப்பட்டனர். சர்வதேச அளவிலான தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டு உள்ளூர் ஆட்கள் இந்த பயங்கரவாதத்தை நடத்தியது அம்பலமானது. இதனையடுத்து, தமிழகத்தில் கோவை உள்பட 10 மாவட்டங்களில் “தேசிய புலனாய்வு முகமை” எனப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, சர்வதேச பயங்கரவாத இயக்கங்களான ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான பிரசார மின்னணு ஆவணங்கள், பென் டிரைவ், சிம் கார்டு, லேப்டாப் போன்றவை சிக்கின. மேலும் ஆதரவாளர்களான கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், ஹிதாயதுல்லா ஆகிய இருவர் கைது செய்ய பட்டனர்.

இந்நிலையில் கோவை இளைஞர்கள் தொடர்பான வழக்கில் ஒரு குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அது குறித்து போலீசார் கூறுகையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் அவர்கள் கொள்கைகளை பரப்புவதற்க்காக பல இளைஞர்களை மூளை சலவை செய்து, அந்த அமைப்பிற்கு ஆள் திரட்டும் ரகசிய பயிற்சி மையங்களை நடத்திவந்துள்ளன. இதை யாரெல்லாம் பங்கேற்றனர் என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். இந்த ரகசிய மையங்களில் தயாரிக்கப்படும் நபர்களை கேரளாவின் ஏஜெண்டுகள் உதவியுடன், வெளிநாடுகளில் வேலை என “ஐ .எஸ்” க்கு ஆதரவாக பல நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சந்தேக படும்படியான நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவையில் 1998ம் ஆண்டு பா.ஜ.,க மூத்தத்தலைவர் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 50 உயிரிழந்தனர், 250 பேர் காயமடைந்தனர். அப்போதே தமிழக அரசு அதில் ஈடுபட்ட” அல் -உம்மா” எனப்படும் அமைப்பை தடை செய்து, அதை நிறுவியவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website