சர்வரை முடக்கிய நித்தி ஆதரவாளர்கள் 12 லட்சம் பேர் கைலாசாவிற்கு ரெடி !! “நான் பிறந்தது இதற்குதான்” -நித்தி அதிரடி பேச்சு

December 12, 2019 at 6:59 pm
pc

நித்தியோட சொந்தநாடு உருவாக்குற செய்தி வந்தாலும் வந்துச்சி “எஸ்க்குயூஷ் மீ கைலாசவுக்கு எப்படிங்க போகணும்” அப்டின்னு நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிடுகிறார். திரும்பிய இடமெல்லாம் நித்தியின் செய்தி தான் இந்திய ஊடகங்களை கலங்களிடித்து கொண்டும், போலீசாருக்கு தண்ணி காட்டி கொண்டும் ரிலாக்ஸ்-ஆக யூடியூபில் தனது விடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். கைலாச என்ற நாட்டை உருவாக்க போவதாகவும், அதில் குடிஉரிமை வேண்டுமென்றால் விண்ணப்பிக்கலாம் என்றும் சர்சைகளை கிளப்பி வருகிறார். அவரின் கைலாச நாட்டிற்கு போக, சர்வரே கதிகலங்கும் அளவிற்கு இதுவரை 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடந்தால் என்ன வென்று தனது ஆதரவாளர்காக கூல் ஆக சத்சங்கம் நிகழ்ச்சியில், வெள்ளி இருக்கை,நாக உருவ சிலை, சமீபத்தில் புலித்தோல் சிம்மாசனம் என தனது தோரணையிலும் மாஸ் காட்டும் நித்தி பேச்சிலும் குறைவைக்கவில்லை. தான் வந்ததால் தான் கைலாசாவில் பூப்பூக்குது, காய் காய்க்குது என கதை விட்டு கொண்டு இருக்கிறார். மேலும் கைலாசாவிற்கு பெருமாதரவு கிடைத்துள்ளதாகவும், பலரும் நிலங்கள் தர தயாராக உள்ளதாவும் தெரிவித்த அவர் விலங்குகளுக்கும் குடியுரிமை அளிக்கிறேன் என பேசியுள்ளார். நித்தியானந்தாவின் சீடரான லெனின் கருப்பையா என்பவரின் புகாரின் பேரில் நித்தியானந்தாவை 12ம் தேதிக்குள் பிடிக்கவேண்டும் என கர்நாடக காவல் துறைக்கு அம்மாநில நீதிமன்றம் கேடு விதித்திருக்கிறது, அவரை ஒருபுறம் போஸார் தேடி கொண்டிருக்க அவர் யூடியூபில் கலக்கி கொண்டு வருகிறார்.

சமீபத்தில் தீப விழாவிற்கு திருவண்ணாமலைக்கு வருவாரா என திர்பார்த்த நிலையில் தன் ஆசிரமத்திலிருந்தே ஆன்லைனில் சத்சங்கம் நிகழ்வில் பேசிய அவர், இந்துமதம் தொடர்பாகவும், சுய சந்தேகத்தால் ஏற்படும் விளைவுகளையும் விளக்கினார். தான் பிறந்த காரணத்தையும் அவர் பாணியில், பூமியில் தான் இந்து மதத்தை போக்க செய்வதர்காகவே அவதரித்ததாக கூறினார். ஒவ்வொரு முறையும் பழி சுமத்துகிறார்கள் நானும் நல்லவன் என்று நிரூபித்துக்காட்டுகிறேன், என அசத்தலாக கூறும் நித்தி இன்னும் என்னவெல்லாம் சொல்ல போகிறாரோ பார்க்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website