ஆசை மனைவிக்கு “வெங்காய காதணி” சர்ப்ரைஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் !!
பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் தனது மனைவிக்காக தற்போது இந்தியாவின் விலையுயர்ந்த பரிசான வெங்காய காதணியை அளித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை கரீனா கபூரும் ,நடிகர் அக்ஷய் குமாரும இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது நிகழ்ச்சி முடிவில் நடிகை கரீனா கபூருக்கு வெங்காய காதணியை வழங்கிள்ளனர். இதனை கரீனா கபூர் பெரிதாக விரும்பாததால் , தனது மனைவிக்கு அதனை பிடிக்கும் என எண்ணி நடிகர் அக்ஷய் குமார் அதனை கேட்டு வாங்கிவந்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட அவரது மனைவியும், நடிகையுமான டிவிங்கிள் கண்ணா, “தனது ஆசை கணவர் எனக்காக இந்த பரிசை வாங்கிவந்துள்ளார், முதலில் கபில் சர்மா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட இந்த காதணியை கரீனா கபூர் பெரிதும் விரும்பவில்லை போல, அதனால் எனக்கு பிடிக்கும் என நினைத்து அக்ஷய் வாங்கிவந்துள்ளார் சில நேரங்களில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் மனதை கவரலாம் “என குறிப்பிட்டு அந்த வெங்காய காதணியின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல சமீபத்தில் தனது கணவர் அக்ஷய் எனக்கு போட்ட காபி என்று இன்ஸ்டாகிராமில் காபியின் புகைப்படத்தை போட்டது வைரலானது குறிப்பிடத்தக்கது.