“பிகில்” 50வது நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட AGS நிறுவனம், கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் !!
2019 ம் ஆண்டின் அதிக வசூல் படைத்த தமிழ் படம் என்ற பெருமையை பிகில் பெற்றுள்ளதாக பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தகவல்.
தளபதி விஜய் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் “பிகில்” இந்த திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது. வெளியானது முதல் ரசிகர்கள் படத்தில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாதியிடம் படம் எவ்வளவு வசூல் ஈட்டியது என கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.180 என்று படக்குழு கூறியது, நடுவில் பிகில் ரூ.300 கோடி வசூல் செய்ததாக வந்த தகவல் வந்தது. இது உண்மையா என தெரியவில்லை. இந்த படம் வெற்றிப்படமா, தோல்விப்படமா வசூல் எவ்வளவு என கேள்வி எழுந்த்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் இன்று பிகில் படம் திரைக்கு வந்து 50 நாட்கள் ஆனா நிலையில், படத்தின் 50 வது நாளான இன்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தளபதி ரசிகர்களுக்கு சந்தோஷமான தகவலை அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” 2019ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் அதிக வசூலை படைத்த படமாக” பிகில் ” சாதனை படைத்துள்ளது. இந்த படம் வெளியாகி 50 தாவது நாளான இன்று இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த படத்தை வெற்றி படமாக மாற்றிய ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் விமர்சனமும் செய்து வருகிறார்கள். படத்தின் வசூல் அதிக வசூலாக இருந்தால், எவ்வளவு வசூல் என ஏன் வெளியிடவில்லை, முழுமையாக சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.