நள்ளிரவில் வயக்காட்டில் இளம்பெண் சடலம்!! கொலையா ? தற்கொலையா ? பரபரப்பான சேலம் !!
சேலம் ஆத்தூர் அருகே வயக்காட்டில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இது கொலையா தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஊரண்டி வலசு காட்டுக்கொட்டகை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி-சசிரேகா தம்பதிகளுக்கு 23 வயதில் கவுசிகா என்ற மகள் இருந்துள்ளார். 3 வருடத்திற்கு முன்பு இவர் சின்ன சேலத்தை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்ததால் பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். சந்தோசமாக ஆரம்பித்த திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு 1 வயதில் பூசிகா என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். சரவணன் அலுமினிய கதவுகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்தார். அதே பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் கவுசிகா வேலைபார்த்து வந்துள்ளார்.
திருமணமாகி ஆகி 3 வருடங்கள் கடந்தாலும் சந்தோசமாக ஆரம்பித்த அவர்களது வாழ்க்கையில் அடிக்கடி சண்டைகள் நடந்ததக கூறப்படுகிறது. அந்த சண்டைகளை கவுசிகாவும் தனது வீட்டில் அடிக்கடி சொல்லிவந்துள்ளார். அண்மையில் மீண்டும் தம்பதிகளுக்குள் தகராறு வரவே கவுசிகா கோபித்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். சில நாட்களாகவே அம்மா வீட்டில் இருந்துவந்த கவுசிகா நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் பதறி போய் பெண்ணை தேடி பெற்றோர்கள் அவரை தேடினார்கள். அப்போது ஒரு வயக்காட்டில் மயங்கிய நிலையில் கிடைத்துள்ள கவுசிகாவை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக வாழப்பாடி தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவலால் அதிர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளது, யாரோ அடித்து கொலை செய்து உள்ளார்கள், முகம், கால்களில் காயங்கள் உள்ளது என போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இது தற்கொலையா, அல்லது கொலையா, கவுசிகாவேலைபார்த்த பியூட்டி பார்லரில் பிரச்சனையா, அல்லது கணவரிடம் பிரச்சனையா என மல்லியக்கரை போலீசாரும் ஆத்தூர் உதவி ஆட்சியாளரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.