“நயன்தாரா ஆவது தான் ஆசை அவர்தான் என் ரோல் மாடல்” தமிழுக்கு வரும் மலையாள இளம் சிட்டு!! அனஸ்வரா ராஜனின் அசத்தல் பேச்சு !!!
5 மலையாள படங்களை நடித்து முடித்த பள்ளி மாணவி, இந்த இளம் வயதிலேயே அப்படியொரு நடிப்பு. அழகிய முக அமைப்பாலும், திறமையான நடிப்பாலும் இப்போது தமிழ் இளைஞர்களை கொள்ளையடிக்க தமிழ் திரையுலகிற்கு களம் இறங்கும் இளம்நடிகை அனஸ்வரா.
பள்ளிப்படிக்கும் போதே நான் தனிநடிப்பில் பிரபலமானவள் நிறைய பரிசுகளை வாங்கியுள்ளேன். குறும்படங்களில் நடித்துள்ளேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே மஞ்சுவாரியருடன் குழந்தை நட்சத்திரமாக “உதாரணம் சுஜாதா” என்ற படத்தில் அறிமுகமானேன். அருமையான மகள் கதாபாத்திரம். எனக்கு முதல் படத்திலேயே பல விருதுகள் வாங்க வைத்த கதாபாத்திரம், மேலும் நடிப்பதற்க்கான வாய்ப்பை எனக்கு பெற்றுதந்தது. 11ம் வகுப்பு படிக்கும் போது “தண்ணீர் மதத்தின் தினங்கள்” படத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மனைவியாக நடித்தேன். உண்மையிலேயே அப்போது நான் 11ம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். பல கலைஞர்கள் என்னுடன் நடித்தார்கள். இந்த படத்தில் என் நடிப்பு மலையாள திரைப்பட துறையை தாண்டி தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் பேசப்பட்டது. இதனால் பட வாய்ப்புகள் குவிந்தன என் வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தில் “ஆதியராத்ரி ” என்ற படத்தில் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.
பெண்ணிற்கு முக்கியத்துவம் தரும் “வாங்கு” என்ற மலையாள படம் தற்போது திரைக்கு வர உள்ளது. தற்போது தமிழ் திரைஉலகிலும் கால்பதிக்கவுள்ளேன். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “எங்கேயும் எப்போதும்” சரவணன் இயக்கும் “ராங்கி” என்ற படத்தில் நடிகை திரிஷா உடன் நடித்து வருகிறேன். சிறுவயதில் இருந்தே தமிழ் திரைப்படங்கள் பார்ப்பேன். தமிழ் எனக்கு நன்றாக பேசவும் தெரியும், தமிழில் “வாரணம் ஆயிரம்” படத்தை பார்த்து வியந்துள்ளேன். நான் தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாராவை போல ஆகவேண்டும் என்பது எனது ஆசை, அவர்தான் என் ரோல் மாடல்; ஏனென்றால் அவர் போராடி வென்றவர். எதுவும் தெரியாமல் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ளேன். தமிழ் மக்கள் என்னை வரவேற்பார்கள் என நம்புகிறேன். எல்லாம் கடவுள் காப்பாறுவார் என்பதே நம்பிக்கை என அவர் கூறினார்.