“பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்க்கு மரணதண்டனை” – இஸ்லாமாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோக வழக்கில் மரணதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப். இவர் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்து, 1999ல் பாகிஸ்தான் நாட்டு அதிபராக பதிவியேற்றார். இவர் கடந்த 2008ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ் ஷெரிப் ) முஷாரப் மீது கடந்த 2013ம் ஆண்டு தேச துரோக வழக்கை பதிவு செய்தது. அதேபோல கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 3 ம் தேதி பாகிஸ்தானில் தவறான முறையில் அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக அப்போதைய அதிபராக இருந்த முஷரப் மீது அந்நாட்டு அரசு தேச துரோக வழக்கை பதிவு செய்தது . அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசி பூட்டோ மீதான கொலை வழக்கிலும் அவர் பெயர் சேர்க்கப்பட்டது .இந்த வழக்குகள் மீதான விசாரணையை நீதிபதி யாவார் அலி தலைமையிலான 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மேற்கொண்டது. இந்நிலையில் அவர் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததன் மூலம் தேசத்துரோக வழக்கு உறுதி செய்யப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
