“அமெரிக்காவில் தமிழக விஞ்ஞானி”, தேசிய அறிவியல் மைய தலைவரானார் சேதுராமன் பஞ்சநாதன்” !!

அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வளர்க்கும் விதமாக தேசிய அறிவியல் மையம் அரசு சார்பில் செயல்படுகிறது. இதன் தலைவராக இருந்த பிரான்ஸ் கோர்டோவாவின் பதவிக்காலம் முடிவடையாதல், 2020ம் ஆண்டுக்கான புது தலைவராக தமிழகத்தில் பிறந்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதனை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.

சேதுராமன் பஞ்சநாதனைபற்றி பேசிய அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்துறை இயக்குனர்
கெல்வின் ட்ராக்மியா கூறியதாவது; சேதுராமனை தேசிய அறிவியல் மையத்தில் தலைவராக தேர்தெடுக்க காரணம், அவர் ஆராய்ச்சி, நிர்வாக மேலாண்மை, கொள்கைகளை வகுத்தல் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர். தனது முழு பங்களிப்பையும் அளித்தவர் என்பதால்தான். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் அமேரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிப்பதை சேதுராமன் கட்டாயம் உறுதி செய்வார் என அதிபர் டிரம்பும் நம்பிக்கை தெரிவித்தார் என பேசினார். தமிழகத்தை சேர்ந்த சேதுராமன் சென்னை பல்கலை கழகத்தில் தனது இயற்பியல் பட்டப்படிப்பை முடித்து, பின்னர் பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (IISC) பொறியியல் பயின்றார். 1997ம் ஆண்டு அமெரிக்க சென்று பேராசிரியராக பணியை தொடர்ந்தார். அங்கேயே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பல பதவிகளை வகுத்தார். அவர் தற்போது, அரிசோனா பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.