வந்துட்டாங்கய்யா !! கைகோர்க்கும் “குண்டக்க மண்டக்க” கூட்டணி, பரவும் போட்டோ: மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள் !!
நகைச்சுவையில் கலக்கிய பழைய கூட்டணி, தற்போது சந்தித்து கொண்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நகைசுவை கூட்டணியான வடிவேலு – பார்த்திபன் கூட்டணியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. வெற்றி கொடிக்கட்டு, காதல் கிறுக்கண் போன்ற நகைச்சுவை படங்கள் மூலம் காமெடியில் கலக்கியவர்கள் இவர்கள். கடைசியாக குண்டக்க மண்டக்க எனும் படத்திற்கு பிறகு ஒன்றாக சேரவே இல்லை. எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் வடிவேலு மாதிரி வராது, என சொல்லும் அளவிற்க்கு வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி தற்போது வரை பேசப்படுகிறது. தற்போது மீம் கிரியேட்டர்களின் தெய்வமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் வைகைப்புயல். அவரின் ரியாக்ஷனை வைத்து என்ன மீம் போட்டாலும் அப்படியே செட் ஆகிவிடும். 2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக விஜயகாந்தை விமர்சித்த விவகாரத்தில், அப்போது சினிமாவை விட்டு போனவர் அதன் பின்னர் வரவே இல்லை. இருந்தாலும் மீம்களின் மூலம் வலைத்தளங்களில் தினமும் வலம் வருகிறார். சமீபத்தில் கமல் 60விழாவில் கலந்துகொண்டு தரிசனம்தந்த அவர் “தலைவன் இருக்கிறான் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வருவதை உறுதி செய்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நடிகர் வடிவேலுவும், நடிகரும், இயக்குனருமான பார்த்திபனும் நேரில் சந்தித்த ஒரு போட்டோவை போட்டு” இன்றைய சந்திப்பு, நாளைய செய்தியாகலாம் ” என பதிவிட்டுள்ளார் பார்த்திபன். இந்த போட்டவை பார்த்த நெட்டிசன்கள், செய்தியெல்லாம் வேண்டாம் நல்ல காமெடியை பார்த்து ரொம்ப நாளாச்சு சீக்கிரம் உங்க கூட்டணியில் படம் பண்ணுங்க, படத்திற்காக காத்திருக்கிறோம் என கெஞ்சாத குறையாக கோரிக்கையை வைத்துள்ளனர்.