மேயர் பதவியில் 7 மாத குழந்தை !! அமெரிக்காவில் நடந்த அதிசயம்.

அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வொயிட் ஹால் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும் அந்த நகரின் கௌரவ மேயர் பதவி ஏலத்தில் விடப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் அந்த நகரின் மேயராக அறிவிக்கப்படுவார். அதில் வரும் நிதியை தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் நிதி திரட்டுவதற்க்கான மேயர் பதவி ஏலத்தில் விடப்பட்டது, இதில் பங்கு கொண்டு “வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ” என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதில் அதிசயம் என்னவென்றால் அவர் 7 மாத குழந்தை. இவருக்கான பதவிஏற்பு விழாவும் நடைபெற்றது அதில் சுமார் 150 பேர் கலந்துகொண்டு 7 மாத மேயரை விமர்சையாக கொண்டாடினர்.
இந்த நிகழ்வு அன்பின் வெளிப்பாடாக நடத்தப்பட்டது. சார்லி-யின் வளர்ப்பு தாய் நான்சி இந்த நிகழ்வில் “அமெரிக்கா எல்லாருக்கும் பொதுவானது, மேலும் அமெரிக்காவை அன்பான நடக்குவோம்” என்ற செய்தியை உரக்க சொன்னார். எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் அனைவரும் ஒன்றாக அன்பு காட்ட வேண்டும் என்று கூறினார்.