மெக்ஸிகோவில் 175 குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த 34 பாதிரியார்கள் !!

மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக் சர்ச்சில் 175 குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 34 பாதிரியார்கள், வெளியான அதிர்ச்சி தகவல்.
வடஅமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நகரில் ரோமன் கத்தோலிக்க சர்ச் ஒன்றில் இருந்த பாதிரியார்களால் 1941ம் ஆண்டில் இருந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக எழுந்த புகாரால், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், குறைந்தது 175 குழந்தைகள் பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக திருகிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த சர்சையில் சிக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும் சுமார் 60 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்த கேவலமான கொடூர செயலில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக இதுபோல பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாதிரியார் மார்சியல் மேசியலை , கடந்த 2006ம் ஆண்டு போப் 16ம் பெனிடிக், பணியில் இருந்து ஓய்வு பெறுமாறு உத்தரவிட்டார். ஆனால் குற்றசாட்டுகளை எதிர்கொள்ளாமலேயே அவர் கடந்த 2008ம் ஆண்டு இறந்துள்ளார் என சனிக்கிழமை வெளியான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 33 பாதிரியர்களில் 6 பேர் இறந்துவிட்டனர், 8 பேர் துறவறத்தை விட்டு வெளியே சென்றுவிட்டனர் மேலும் ஒருவர் சபையை விட்டு வெளியேறினார். 18 பாதிரியார்கள் முக்கிய பொது பணியில் இருக்கும் பொறுப்பில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளனர்.