நேரலையில் அவசரப்பட்டு வாயவிட்ட பெண் செய்தியாளர் !!

“வேலையே வேணாம், லாட்டரி அடிச்சுடுச்சி” ஆனா ’32 கோடி எனக்கு இல்லையா? பொய்யா’? என புலம்பிய ஸ்பெயின் பெண் செய்தியாளர்.
ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெறும். அந்நாட்டில் அதில் ஒரு பகுதியாக லாட்டரி குலுக்கல் நடைபெறுவது பிரபலம். இந்த ஆண்டு கிறிஸ்த்துமஸ் நிகழ்வை ஒட்டியும் லாட்டரி குலுக்கல் 22 தேதி நடைபெற்றது. இந்த கிறிஸ்துமஸ் லாட்டரி சற்று வித்தியாசமானது, ஒரே நம்பர் கொண்ட பல சீட்டுகள் விற்கப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நம்பரை கொண்டவர்கள் அனைவரும் பரிசு பெறுவார்கள். ஒரே நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட லாட்டரி சீட்டு அனைத்தையும் வாங்கியிருந்தால் அவருக்கே மொத்த பணமும் வழங்கப்படும். ஆனால் இது பெரிய குலுக்கல் என்பதால் அவ்வாறு நடக்கும் வாய்ப்பு குறைவு. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அங்கு நடைபெறும் நிகழ்வை நாட்டின் முக்கிய ஊடகங்கள் நேரலை செய்துகொண்டிருந்தன. நடாலியா என்ற பெண் செய்தியாளரும் களத்தில் இருந்து செய்திகளை நேரலை செய்துகொண்டிருந்தார். அவரும் பல லாட்டரி சீட்டை வாங்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் , இந்திய மதிப்பில் 32 கோடி பரிசுக்கான லாட்டரி சீட்டின் நம்பர் அறிவிக்கப்பட்டது . அனைவரும் தன்னிடம் உள்ளதா என தேடி கண்டுபிடித்து கொண்டாடினர் .அப்போது நடாலியா அந்த நம்பர் தன்னிடம் இருப்பதை கண்டு , உற்சாகத்தில் துள்ளினார் .அதே உற்சாகத்தில் , தொலைக்காட்சி நேரலையையே மறந்து” நான் சந்தோஷமாக இருக்கிறேன், பெரும் பணத்தொகை எனக்கு கிடைத்துவிட்டது .நான் நாளை முதல் வேலைக்கு போக மாட்டேன் .எனது வேலையை ராஜினாமா செய்கிறேன் ” என அறிவித்தார் .அவருடன் இருந்த சக ஊடக நண்பர்கள் செய்வதறியாது சிரித்த வண்ணம் நின்றனர் . ஆனால் உண்மையான பரிசு தொகையை என்னவென்று அறியாமல் நடாலியா உற்சாகப்பட்டார் .உண்மையிலேயே வெற்றி பெற்ற அனைவர்க்கும் தொகையை பிரித்து கொடுக்கும் போது அவரின் பரிசு தொகையாக இந்திய மதிப்பில் ரூ, 4லட்சம் ரூபாய்தான் கிடைத்தது.

சில மணித்துளியில் மீண்டும் நேரலையில் தோன்றிய நடாலியா, கொஞ்சம் எமோஷனல் ஆனதால் அப்படி பேசிவிட்டேன் ,உண்மையை உணர்ந்துவிட்டேன். 25 வருடமாக எனது செய்தியாளர் பணியை திறம்பட செய்த்துவருகிறேன். அதற்கு நான் பெருமை படுகிறேன். இதன் ஒரு விஷயத்தை கொண்டு நான் பொய் பேசுபவர் என நீங்கள் நினைக்கவேண்டாம். தவறான தகவலை அளித்ததற்கு எண்ணை மன்னிக்கவும் என கேட்டுக்கொண்டார்.