57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு கண்டனம் !!

ஓ.ஐ.சி என்றழைக்கப்படும் 57 நாடுகளின் உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பு, இந்தியா சிறுபான்மையின மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் நடந்துகொள்வதாக கண்டித்திருக்கிறது.
1969ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓ.ஐ.சி எனப்படும், ஆர்கனைஷேஷன் ஆப் இஸ்லாமிக் கோப்பரேஷன் என்கிற இஸ்லாமிய கூட்டமைப்பில் 57 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் கூட்டத்தில் தற்போது இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம் குறித்து கேள்வி எழுப்பி கண்டித்துள்ளது. அதில் அந்த கூட்டமைப்பு கூறியிருப்பதாவது, இந்தியாவில் இஸ்லாமியர் பாதுகாப்பு இல்லை என கவலை தெரிவித்திருக்கிறது. மேலும் மூன்று நாடுகளில் இருந்து வரும் 6 சிறுபான்மையின மக்களுக்கு கட்டப்படும் அக்கறை இஸ்லாமியர்களிடம் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் 42வது அமர்வின் போது இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

கடந்தவாரம் மலேசியாவில் நடந்த அரபிக் நாடுகள் உச்சி மாநாட்டில், நீங்கள் கொண்டுவந்துள்ள சட்டதை போல நாங்களும் கொண்டுவந்தால் என்ன ஆகும் என இந்தியாவை கேள்வி எழுப்பிய மலேசிய நாட்டின் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி சமீபத்தில் ராம் லீலா மைதானத்தில் இஸ்லாமிய அமைப்புக்களுடன் தனது அரசுக்கு நல்லுறவு இருப்பதாக கூறிய 3 மணி நேரத்திலேயே இந்த 57 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவை கண்டித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.