ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான இயக்குனர் பா. ரஞ்சித்தின் அண்ணன் சுயேட்ச்சையாக வெற்றி !!

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அண்ணன், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொதுவான வாக்குகள் நெற்றில் இருந்து எண்ணப்படுகிறது. இதில் திமுக, அதிமுக என இருகட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றது. இந்நிலையில் தற்போது திமுக அதிக இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அதிமுக, திமுக போன்ற கட்சிகளை தவிர சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்டுள்ளனர். அந்த வகையில், மெட்ராஸ் படத்தை இயக்கி இயக்குனராக கால் பதித்து, பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி. காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ப.ரஞ்சித் அவர்களின் சகோதரர் பிரபு என்பவர் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பிரபு 155 வாக்குகள் வித்தியாசத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளம்பருதி என்பவரை தோற்க்கடித்துள்ளார். பா.ரஞ்சித்தின் சகோதரர் மொத்தம் 3846 வாக்குகளை பெற்றுள்ளார்.
பா.ரஞ்சித் சமீபகாலமாகவே தனது கருத்துகளை வெளிப்படையாகவும், புரட்சிகரமாகவும் தெரிவித்து வருகிறார். இவரது படங்களும் அதே பாணியில் தான் இருக்கும். இந்நிலையில் இவரது சகோதரர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியத்தை அப்பகுதி மக்கள் கொண்டாடிவருகின்றனர்.