மனைவி, மகள்களை கொலை செய்து ஓட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை!

February 18, 2022 at 10:58 am
pc

நாகப்பட்டினத்தை சேர்ந்த  தம்பதிகள் லட்சுமணன் – புவனேஸ்வரி. இவர்களுக் 3  மகள்கள் உள்ளனர்.லட்சுமணன் ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகள் தனலட்சுமி காதல் திருமணம் செய்து கொண்டு தனியா வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து லட்சுமணன் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டு உள்ளார். பின்னர் உணவக்தை திறக்கமால் வீட்டில் வைத்தே உணவனம் நடத்தி வந்துள்ளார்.
ஆனால் கடந்த 4 நாட்களாக லட்சுமணன் கடையை திறக்கமால் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த லட்சுமணன் தனது மனைவி புவனேஸ்வரி(45) இரண்டு மகள்கள் வினோதினி(18), அக்சயா(15) ஆகியோர்கள் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தனனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.  
இது குறித்து அறிந்த மாவட்ட சூப்பிரண்ட் ஜகவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மனைவி, மகள்களை கொலை செய்து ஓட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   
மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக சென்றதால்  லட்சுமணன் தனது மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website