“அடுத்தடுத்து சோகம்”, இந்தோனேசியாவில் 5 அடுக்கு கட்டிடம் நிலைகுலைந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு !!

இந்தோனேசியாவில், மேற்கு ஜகார்ட்டா நகரில் உள்ள பிரிஃஜென் கட்டாமஸோ என்ற பகுதியில் 5 அடுக்கு மாடி கட்டிடம் நிலைகுலைந்து விழுந்தது. அந்த கட்டடத்தில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டடத்தில் ஒரு பகுதி விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இது வரை 8 பேர் இடிபாடுகளில் காயப்பட்டு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு மீட்பு பணியாளர்கள் விருது வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கு. இந்தோனேசியாவில் சமீபத்தில் மழை வெள்ளத்தில் பல வீடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல கட்டடங்களும் வீடுகளும் சேதம் அடைந்தது.

இந்த விபத்திற்கான காரணத்தையும் அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்பு இதோனேசியா அரசு சம்பத்தில் கட்டுமான விதிகளை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.