“Davangre Sugar” வாடகை ஹெலிகாப்டரில் சேலம் ARRS தியேடரில், ரஜினி கட்-டவுட் க்கு மலர் தூவ ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாடு !!

ரஜினியின் நடிப்பில் தர்பார் படம் ஜனவரி 9 வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல் சூப்பர் ஹிட் ஆகி பட்டி தொட்டி எங்கும் இசைக்கிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷன் உலக தரத்திற்கு இணையான அளவுக்கு பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. வெளிநாடு செல்லும் பயணிகள் விமானத்தில் தர்பார் படத்தின் படைகளின் வண்ணம் அடித்து கோலாகல படுத்தினார்கள்.
தற்போது சேலத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றம் காமராஜ் மற்றும் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் படத்தை வெளியிடும் நாளன்று சிறப்பு ஏற்பாடாக ஹெலிகாப்டரில் ரஜினியின் கட்-டவுட்டுக்கு மலர் தூவ ஏற்பாடு செய்துள்ளார்கள். இதற்காக பெங்களூருவில் டாவன்கேர் சுகர் (Davangre Sugar) என்னும் தனியார் ஹெலிகாப்டர் கம்பெனியிடம் 5 லட்சம் கொடுத்து. 6 துறைகளின் அனுமதியை பெற்றுள்ளார்கள். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, அரசு கட்டடப் பொறியாளர், ஏர்போர்ட் என 6 துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளார்கள். மேலும் சேலம் காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமே என்று கூறிவிட்டு அவர்களும் அனுமதி கொடுப்பதாகத் தெரிவித்தார்கள்.
எங்கள் தலைவர் ரஜினிகாக நங்கள் எதையும் செய்வோம் என தெரிவித்தனர்.
