“மேடையில் தெரியாம பேசிட்டேன்” என விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பவன் !!
அசுரன் படத்தின் 100 வது நாள் வெற்றி கொண்டாட்டத்தில். படத்தின் விழாவில் பேசிய நடிகர் பவன், விஜய் நடித்த குருவி படம் பற்றி பேசி சர்ச்சைக்குள்ளனார். விழாவில் பேசிய பவன் “குருவி படம் 150 நாள் ஓடல !! ஓடவெச்சாங்க !! என பேசினார். இதனால் விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதழைகளில் பவனை பற்றி தாறுமாறாக ரசிகர்கள் பேசினர்.
பவன் பேசிமுடித்த பின் அடுத்து பேச வந்த நடிகர் தனுஷ் ’ஒரு விழா என்றால் அதில் நாம் பேசுவது மட்டும் தான் நம்மால் கட்டுப்படுத்த முடியும். மற்றவர்கள் பேசுவதை கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த விழாவில் நடந்த நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை விட்டு விடுங்கள்’ என்று நாகரீகமாக பேசி, விஜய் படம் கிண்டலடிக்க பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்ததார். தனுஷின் இந்த பண்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இன்று கொடுத்த பேட்டியில் நடிகர் பவன் அசுரன் பட வெற்றிவிழாவில் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். தான் அவ்வாறு பேசியிருக்க கூடாதென்று விஜய் மற்றும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார்.