மணமணக்கும் மணத்தக்காளி கீரை கூட்டு நீங்களும் சமைக்கலாம் வாங்க ….!!

May 25, 2022 at 6:00 pm
pc

தேவையான பொருட்கள்..

மணத்தக்காளி கீரை – ஒரு கப்,
பயத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு,
கடுகு- அரை டீஸ்பூன்,
நெய் – தலா அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை…

  • கீரையைக் கழுவி பயத்தம்பருப்புடன் வேக வைக்கவும்.
  • உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை வாணலியில் சிவக்க வறுக்கவும். அதனுடன் தேங்காயை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
  • வேக வைத்த கீரையுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
  • நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்.இது… வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website