சுவையான பலாப்பழ பிரியாணி ரெடி….! இப்படி செஞ்சு பாருங்க ….!!

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, காளான் பிரியாணி மற்றும் இன்னும் பல வகை பிரியாணிகளைக் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன பலாப்பழ பிரியாணி. முதலில் பலாப்பழத்தின் ரகசியம் பற்றி தெரியுமா?
சுவை மற்றும் ஆரோக்கியம்
பலாப்பழம் பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியது. முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் பலாப்பழம் ருசியில் மட்டுமின்றி மணத்திலும், ஊட்டச்சத்து நிறைந்தவகையாகவும் உள்ளது. இவற்றில் பல்வேறு வகைகள் இருந்தாலும், அனைத்தின் குண நலன்களும் ஒன்றாகும். இதன் சுவை தான் வித்தியாசமாகக் காணப்படும் .
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின்கள்
பலாப்பழம் வைட்டமின்கள் -ஏ, வைட்டமின்கள் -பி6 மற்றும் வைட்டமின்கள் -சி போன்ற பல்வேறு சத்துக்களைக் கொண்டது. இதன் சுவை மிக அருமையாக இருப்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
பலாப்பழ பிரியாணி
உடலிற்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் பலாப்பழ பிரியாணி சுவை மட்டுமல்லாமல், நம் உடலிற்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது.
பலாப்பழ பிரியாணி செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் அதனைச் செய்யும் முறை போன்ற அனைத்து விவரங்களையும் இந்தப் பதிவில் காணலாம்
செய்யத் தேவையான பொருள்கள்
2-கப் பாசுமதி அரிசி
பலாப்பழம்
நறுக்கிய வெங்காயம்
இஞ்சி
பச்சை மிளகாய்
சிவப்பு மிளகாய்
பச்சை கொத்தமல்லி
கரம் மசாலாப் பொடி
சீரகம்
அரை கப் தயிர்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி திராட்சை
குங்குமப்பூ
புதினா
அரை கப் பால்
தேவைக்கேற்ப உப்பு
பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?
முதலில் பாசுமதி அரிசியை எடுத்துக் கொண்டு அதை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு, அத்துடன் பச்சை, பிரிஞ்சி இலை, கிராம்பு, இலவங்கப்பட்டை, மற்றும் சீரகம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இப்போது, வாணலியில் நெய் சேர்த்து சீரகம், இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, 1 நிமிடம் வர வதக்க வேண்டும்.
இவ்வாறு நன்றாக வதங்கிய பிறகு, தயிர், கரம் மசாலா மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்க வேண்டும்.
பின்னர், பலாப்பழத்தைத் தனியாக வறுத்து, அதில் உப்பு, பச்சை கொத்தமல்லி, புதினா போன்றவற்றைச் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
அதன் பின், பலாப்பழக் கலவையின் மேலே அரிசியை பரப்பிவிட்டு, கொத்தமல்லி மற்றும் புதினாவை நறுக்கி தூவ வேண்டும்.
பிறகு நெய்யில் வெங்காயத்தை நன்றாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெய்யில் முந்திரி பருப்பு மற்றும் திராட்சை ஆகியவற்றை வறுத்து அதைத் தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வாணலியில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ போன்றவற்றைச் சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் வரை மூடி வைத்து லேசான தீயில் வைத்து சமைக்கவும்.
இரண்டு நிமிடத்தில் மண மணக்கும் பலாப்பழ பிரியாணியை சுவைத்து உண்ணலாம்.