நடிகை அமலா பால் தந்தை பால் வர்கீஷ் உடல் நல குறைவால் மரணம் !!
2010ம் ஆண்டு தமிழில் அறிமுகமான அமலா பால் சிந்து சமவெளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில் பிரபலமானார். இவர் இயக்குனர் ஏ.எல் விஜய் கல்யாணம் செய்து விவாகரத்தும் ஆனது சமீபத்தில் ஆடை படத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளானாலும் பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு “அதோ அந்த பறவை போல” என்ற படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசினார். இந்நிலையில் அவருக்கு பெரும் அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அமலா பால் அவர்களின் தந்தை பால் வர்கீஸ் நேற்று காலமானார். . அவரது தந்தை பால் வர்கீஷ் கேரளாவில் உடல் நலக்குறைவால் நேற்று அகால மரணம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அமலா பாலின் சொந்த ஊரான கேரளா மாநிலம் குருப்பம்பாடியில் தந்தை பால் வர்கீஷின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை, குருப்பம்பாடி செயின்ட் பீட்டர் மற்றும் செயின் பால் கத்தோலிக் தேவாலயததில் நடைபெறுகிறது.
அமலா பாலின் நெருங்கிய திரையுலக நண்பர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தனர்.