இவரே இங்கிலாந்தின் புதிய பிரதமர்: வெளியான ஆய்வு முடிவு!

August 1, 2022 at 7:03 am
pc

இங்கிலாந்து புதிய பிரதமர் யார் வருவார் எகின்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான போட்டியில் யார் வெற்றி பெறுவார்? என்பது பற்றி ஸ்மார்கெட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், லிஸ் டிரஸ் (Liz Truss) 89.29 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த போட்டியில் உள்ள இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் (Rishi Sunak) வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சுருங்கி, 10 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. இதனால், பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் ஆய்வின்படி, சுனாக் மிகவும் பின் தங்கியுள்ளார்.

இந்த ஆய்வில், மற்ற வேட்பாளர்களுக்கு 1 சதவீத ஆதரவு கூட இல்லை. இதன்படி, கெய்ர் ஸ்டார்மர் 0.20 சதவீதமும், பென்னி மோர்டான்ட் 0.10 சதவீதமும் மற்றும் ஜெரேமி ஹன்ட் 0.10 சதவீதமும் பெற்று உள்ளனர்.

இதனால், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் லிஸ் டிரஸ் (Liz Truss) வெற்றி பெற 90% வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website