சூரனாய் சூர்யா பாடிய சூரரைப்போற்று படத்தின் முதல் சிங்கிள் வெளியானது !!
சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து சம்யுகவலைதங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது டுவிட்டரில் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை சூர்யா பாடி இருப்பதாகவும்சூர்யா தனது குரலிலேயே பாடியுள்ளார் இந்த தீம் மியூசிக் இன்று வெளியானது. மாறா தீம் மியூசிக் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படம் ஏப்ரல் 2020 வருடம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.