“அவ தலையில போட்டு உடைச்சிருப்பேன்”, இயக்குனர் மிஷ்கின் சுவாரசிய சம்பவம் !!
சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படம் 24ம் தேதி வெளியானது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் ரிலீஸாகி நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் பேசியது வைரலாகியுள்ளது.
ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்களை நடிக்க வைப்பது என்பது ரொம்ப கஷ்டம். இதை பற்றி பேசிய அவர் மனதில் மற்றும் நினைவில் இருந்த சம்பவத்தை கூறினார். சைக்கோ படத்தில் அதிதி, நித்யா இடையே காம்பினேஷன் ஒரு ஷாட் தான் இருந்தது. எல்லாம் நன்றாக சென்றது. விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தை எடுத்தபோது ஆண்ட்ரியா, அனு இமானுவேல் இடையே ஒரு பிரச்சனை வந்தது. அவர்கள் எஸ்கலேட்டரில் உட்கார்ந்து பேசும்போது ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. ஆண்ட்ரியா ஜீன்ஸ, சர்ட்டும், அனு குர்தா அணிந்திருந்தார். ஆண்ட்ரியா அனுவிடம் பத்திரமாக போம்மா, ஆடை மாட்டிக் கொள்ளப் போகுது என்றார். உடனே அனு உன் வேலையை பார் என்று ஆண்ட்ரியாவிடம் கூறினார். இதை பார்த்த நான் அனுவை பயங்கரமா திட்டினேன். உடனே அவர் அழுதார். என்னிடம் அப்போது ஒரு பூசணிக்காய் இருந்தால் அனுவின் மண்டையில போட்டு உடைச்சிருப்பேன் என்றார். மேலும் ஆண்ட்ரியா ஒரு சீனியர் நடிகை தனது முதல் படத்திலேயே அணு இம்மானுவேல் இதுபோன்று நடந்து கொண்டது தவறு என்று கூறினார்.