பழைய விஜயகாந்த வேண்டும்… கையெடுத்து கும்பிட்ட கேப்டன்… நெகிழ்ந்து கண்ணீர்விட்ட ரசிகர்கள்!

தனது பிறந்து நாளை முன்னிட்டு தேமுதிக அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார் கேப்டன் விஜயகாந்த்.
கேப்டன் பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தமிழக அரசியலின் முக்கிய தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது சினிமா ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் தமிழகம் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேனர்களை வைத்துள்ளனர்.
வாழ்த்து மழை
மேலும் சமூக வலைதளங்களிலும் தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
கையெடுத்து கும்பிட்டு
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி தலைமையகத்துக்கு வந்து தொண்டர்கள் மற்றும் தனது ரசிகர்களை சந்தித்து பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது ரசிகர்களை பார்த்து இரண்டு கைகளையும் அசைத்த விஜயகாந்த், அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.
கண்ணாடியை கழற்றி
மேலும் தனது கண்ணாடியை தானே கழற்றியும் தன்முன் கூடியிருந்த ரசிகர்களை பார்த்தார் விஜயகாந்த். இதனை பார்த்த ரசிகர்களும் தொண்டர்களும் நெகிழ்ந்துபோய் கண்ணீர்விட்டனர். சுதந்ததிர தினத்தன்று கட்சி தலைமையகத்தில் கொடியேற்ற வந்த விஜயகாந்த்தால் கண்ணாடி போட முடியவில்லை. கயிறை இழுத்து கொடியேற்ற முடியவில்லை.
பழைய கேப்டனாக கர்ஜிப்பார்
அப்போது அவரது மனைவி பிரேமலதாதான் அவருக்கு அனைத்தையும் செய்து கொடுத்தார். இதனை பார்த்து கேப்டனுக்கா இந்த நிலைமை என்று கதறினர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது விஜயகாந்தின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்களும் தொண்டர்களும், விரைவில் பூரண குணமடைந்து அவர் மீண்டும் பழைய கேப்டனாக கர்ஜிப்பார் என ஆனந்த கண்ணீர் விட்டு வருகின்றனர்.